சித்திரை புத்தாண்டு தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பயண கட்டுப்பாடுகளை விதிக்கும் கொள்கைரீதியான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்காவிடின் நாட்டில் கொரோனாவின் 3வது அலை உருவாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கருத்து தொிவிக்கையில்,
பயண கட்டுப்பாடு விதிக்கும் கொள்கைரீதியான தீர்மானத்தை அரசு எடுக்க தவறினால் மே மற்றும் ஜீன் மாதத்தற்குள் கொரோனா 3ம் அலை உருவாகும்.
அதனால் நாடு இதுவரை சந்தித்த பேரழிவுகளை காட்டிலும் பாரிய பேரழிவு ஏற்படும் என சங்கம் எச்சரித்துள்ளார்.
மேலும் தற்போதைய நிலமை குறித்து அரசாங்கமும் மக்களும் உரிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.