பக்கத்து வீட்டுக்குள் புகுந்த வளர்ப்பு நாய் ; பிரிந்த எஜமானின் உயிர்
கம்பஹா, மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாய்
மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவரின் வளர்ப்பு நாய் அயல் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதனால் அயல் வீட்டில் வசிக்கும் நபருக்கும் முதியவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது அயல் வீட்டில் வசிக்கும் நபர் முதியவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.