வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்த விஷேட அறிவிப்பு!
வேலைக்காக வெளிநாடு செல்லும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யுமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாடு செல்வதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக் கூடிய பல பிரச்சினைகள் தீரும் என்றும் பணியகம் கூறியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனினும், முறையான பதிவில்லாத காரணத்தினால் அவர்களுக்கு உதவ முடியவில்லை எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகள் மற்றும் உயிர் இழப்புகளை எதிர்கொள்வதற்காக விசேட காப்புறுதி நடைமுறையில் உள்ளது.
எனினும் , காப்புறுதித் தொகை கிடைக்காமல், பதிவு செய்யப்படாத வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று, பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி, உயிரிழப்ப வர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு நியாயமான, மனிதாபிமான அடிப்படையில் இழப்பீடு வழங்க, நலன்புரி நிதித் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அத்தகைய தொழிலாளர்களை சார்ந்திருக்கும் இருபத்தி இரண்டு பேருக்கு இழப்பீடாக ரூ.35 லட்சம் வழங்கப் பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.