இரவிரவாக நடத்தப்பட்ட சோதனை ; நால்வர் அதிரடி கைது
அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ மொறகொட பகுதியில் புதையல் தோண்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நான்கு பேரை மொறகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மொறகொட பொலிஸ் பிரிவின் லபுனோருவ பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் 21 ஆம் திகதி 22ஆம் திகதி புதன்கிழமை இரவு நடத்திய சுற்றிவளைப்பின் போது புதயல்தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் மொறகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணை
கைதுசெய்யப்பட்டவர்கள் 37,43,52,54 வயதுடைய கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ மற்றும் மொறகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.