ஒரு மில்லியனை தாண்டிய பார்வையாளர் எண்ணிக்கை!
கொழும்பு தாமரை கோபுரம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் இன்று வரை அதனை பார்வையிட வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
கொழும்பு தாமரை கோபுரத்தைப் பார்வையிட்ட ஒரு மில்லியன் மக்களில் சுமார் 22,000 வெளிநாட்டவர் உள்ளனர்.
டிசெம்பர் மாதத்திற்குள் Bungee Jumping
இந்நிலையில் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் கொழும்பு தாமரை கோபுரத்தில் Bungee Jumping ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக Bungee Jumping ஐ தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் உலகின் மிக உயரமான Bungee Jumping ஆக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டிருந்தாகவும், ஆனால் ஸ்கை வளைவில் சில மேம்படுத்தல்கள் செய்யப்பட வேண்டும் என்று நிர்வாகம் கண்டறிந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்