வெளிவரவுள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ; பரீட்சை ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்திற்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்பதாகவும், இந்த வாரத்துக்குள் முடியாவிட்டால், வாரம் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு பெறுபேறுகளை வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் முடிவுகளை வெளியிடவிருப்பது கல்வித்துறையின் வெற்றிகரமான மைல்கல்களில் ஒன்றாகவே பார்க்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மே மாதம் தொடங்கி மே 15 ஆம் திகதியே முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் 527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது