யோசிதவை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தில் கைதாகும் நபர்!
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக பெசில் ராஜபக்ஷவை கைதுசெய்யுமாறு இன்று (17) கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (17) காலை லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜரானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.