கடூழிய சிறைத்தண்டனையிலிருக்கும் முன்னாள் அமைச்சர்களின் மனுவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (25) உத்தரவை பிறப்பித்தது.
2014 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊடாக கேரம் போர்ட் மற்றும் தாம் போர்ட் ஆகியவற்றை இறக்குமதி செய்து அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்த சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் மேற்படி கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் தங்கள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இறுதி முடிவு வரும் வரை தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.