மூன்று சிறுமிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் வீடு திரும்பிய மூன்று சிறுமிகளையும் மனநல ஆலோசகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமிகளின் நன்னடத்தை அறிக்கையினை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து குறித்த சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவொரு குற்றச்செயல்களும் வெளிப்படுத்தப்படவில்லை என வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி வழக்கை பிரதான நீதிவான் நிறைவு செய்தார்.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட குடும்பத்தை சேந்த இரண்டு சகோதரிகள் உள்பட மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அந்த மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளனர்.
காணாமல் போன சிறுமிகள் மூவரும் மேற்கத்திய நடனப்பயிற்சிக்காக பொருத்தமான இடத்தை தேடி வந்ததாக தெரியவந்துள்ளது.
தங்களுது விருப்பத்திற்கு பெற்றோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்த செயலை செய்ததாக பொலிஸிடம் அவர்கள் தெரிவித்தனர்.