ஆண்களுக்கு உகந்த ஆரஞ்சு! ஏன் தெரியுமா?
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. எனவே, ஆரோக்கியமான விந்தணுகள் உருவாக ஆண்கள் தொடர்ந்து ஆரஞ்சு பழங்களை சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது.
ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் வராமல் பாதுகாக்கும்.
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதோடு ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவிலான நார்சத்து, ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. சர்க்கரை நோயாளிகளும் கவலையில்லாமல் தினமொரு ஆரஞ்சுப் பழத்தை உண்ணலாம்.
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்ற உதவும் நார்ச்சத்தை அதிக அளவில் கொண்டிருக்கும் ஆரஞ்சுப் பழம் மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, தலைமுடி கொட்டுவதை குறைப்பதுடன், முடி வளர வழி வகுக்கும். அதுமட்டுமல்லாமல் ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
ஆரஞ்சு பழத்தின் தோலிலும் மருத்துவப் பலன்கள் உண்டு. ஆரஞ்சுத் தோலை காயவைத்து, ஓமம், சுக்கு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவேண்டும். அதை அவ்வப்போது பல் பொடியைப் போல பற்களில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் பற்கள் பளிச்சிடும். உடல் எடையும் குறையும்.

உடல் எடையை (Body Weight) பராமரிப்பதில் ஆரஞ்சுத் தோல் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் தினமும் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளப்புடன் மின்னும். ஆரஞ்சு பழச் சாற்றை தினசரி அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் எனவும் சொல்லப்படுகின்றது.