ஹர்த்தாலுக்கு பல அமைப்புக்கள் எதிர்ப்பு ; கடைகளும் திறப்பு!
வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் இன்று (18) ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படிருந்தது.
எனினும் ஹர்த்தாலுக்கு பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசாங்கத்தின் வழமையான செயற்பாடுகளும் , கடைகளும் திறக்கப்பட்டு வழமை போன்று நடவடிக்கையகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கிளையும் எதிர்ப்பு
அதேவேளை இன்று நண்பகல் வரை மாத்திரம் நிர்வாக முடக்கலை முன்னெடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த த ஹர்த்தாலுக்கு சில அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் ஹர்த்தாலுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதேவேளை எம்.ஏ. சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.