ராயன் படத்தில் வில்லன் வாய்ப்பு; எனக்கு இசைதான் முக்கியம்; மறுத்த தேவா!
பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் தேவா, இன்று (17) காலை 75 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், தேவாவின் இறுதிச் சடங்கிற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 'ராயன்' (Raayan) திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக மறைந்த இசையமைப்பாளர் மற்றும் தேவாவுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவர் அதனை நிராகரித்தார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இந்த 50வது திரைப்படத்தில், முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தேவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ராயன் படத்தின் கதைக்களம் வடசென்னை (காசிமேடு) பகுதியை மையமாகக் கொண்டது.
இதனால் சென்னை தமிழ் மற்றும் ஸ்லாங்கை மிக இயல்பாகப் பேசக்கூடிய ஒரு நபர் தேவைப்பட்டதால், தனுஷ் நேரடியாக தேவாவை அணுகிக் கேட்டுள்ளார் இருப்பினும், "எனக்கு நடிப்பு வராது, எப்போதும் எனக்கு இசைதான் முக்கியம்" என்று கூறி அந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துவிட்டார்.