காலிப் பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட செயற்றிட்டம்!
காலி - தொடங்கொட பிரதேசத்தில் ஜின்கங்கை ஆற்றின் மேல் அமைந்துள்ள தொடங்கொட பாலத்தின் கீழ் உள்ள தடைகள் அகற்றப்பட்டு கீழ்நோக்கி தடையின்றி தண்ணீர் செல்வதற்கான வேலைத்திட்டம் இன்றைய தினம் (20.09.2023) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் பொழிந்த கனமழையைத் தொடர்ந்து, ஜின் கங்கை ஆற்றின் சீற்றம் கொண்டு செல்லும் மரக்கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் தொடங்கொட பாலத்தின் கீழ் குவிந்து, ஆற்று நீரின் சீரான ஓட்டத்திற்கு இடையூறாக இருந்தது.
எனவே இலங்கை கடற்படை அப்பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்க்க, பாலத்தின் அடியில் உள்ள அடைப்பை அடிக்கடி அகற்றி வருகின்றனர்.
மேலும் தொடங்கொட பாலத்திற்கு அடியில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக கடற்படையின் டைவர்ஸ் குழு மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை படகு அணி உறுப்பினர்கள் ஆகியோர் அணிதிரட்டப்பட்டனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையால் தடையின்றி தண்ணீர் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதோடு வெள்ள அபாயத்திலிருந்தும் பாதுகாப்பு கிடைத்துள்ளது.