யாழில் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட நல்லிணக்க மையம்!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நல்லிணக்கத்தக செயற்றட்டமாக கொண்டு ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை புதிதாக பதவியேற்ற இலங்கை இராணுவ தளபதியின் முதலாவது யாழ் மாவட்ட விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.