முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தொடரும் போராட்டம்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் இன்று (29) ஆறாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஆறாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தார்.

கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்குரிய 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்காணிகளும், 4குடும்பங்களுக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக் காணிகளும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தியே காணிகளுக்குரிய மக்களால் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.