இலங்கையில் பெரும் துயரச் சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!
மஹியங்கனை பகுதியில் நீர் நிரம்பிய குழி ஒன்றில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் மஹியங்கனை - களுகஹகந்துர, வெவதென்ன பகுதியில் நேற்றையதினம் (09-07-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தின் போது குழந்தையின் தாய், குழந்தையை வீட்டில் இருந்த சிறுவரிடம் ஒப்படைத்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது இந்த குழந்தை வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிரம்பிய குழியொன்றில் விழுந்துள்ள நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால் பிரேத பரிசோதனைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.