ஒருதலைக் காதலின் வெறிச்செயல் ; ஆசிரியை மீது பெற்றோல் ஊற்றி தீவைத்த மாணவர்
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் 18 வயது மாணவன் 26 வயது ஆசிரியை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டய அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அந்த மாணவருக்கு ஆசிரியை மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதில் அந்த ஆசிரியையிடம் அவர் ஓராண்டுக்கும் மேலாக பிரியமுடன் பழகி வந்துள்ளார்.
ஆசிரியை பாசம் காட்டியதை அவர் தவறுதலாக புரிந்து கொண்டு ஒருதலையாக ஆசிரியையை காதலித்து வந்துள்ளார். வேறு பள்ளிக்கு மாறிய போதிலும் அந்த மாணவர் அவ்வப்போது ஆசிரியையை சந்தித்து பேசி உள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தன்று ஆசிரியையை சந்தித்த அந்த மாணவர், அவரது உடையையும், அழகையும் வர்ணித்து தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது.
மாணவரின் ஆபாச பேச்சை விரும்பாத ஆசிரியை கோபம் அடைந்து பொலிஸாரிடம் முறைபாடு அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவர், ஆசிரியையை பழிவாங்க நினைத்து ஆசிரியையின் வீட்டுக்கு சென்று திடீரென ஆசிரியை மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆசிரியை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆசிரியையை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் ஆசிரியை சிகிச்சை பெறுவதாக வைத்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
குறித்த மாணவனை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.