நீரில் அடித்து செல்லப்பட்ட ஐவரை காப்பாற்றிய ஒருவர்; நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
நீரில் அடித்து செல்லப்பட்ட ஐந்து பேரை ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அறுகம்பே உல்லா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போதே இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அறுகம்பே முகாமின் உயிர்காப்பாளரே இவ்வாறு விரைந்து செயற்பட்டு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நான்கு யுவதிகளும், ஒரு இளைஞனும் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தவர்கள் 18, 19, 25 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் கோமாரி 01 பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.