வார்த்தர்க்கம் மோதலில் முடிந்ததில் ஒருவர் பலி
பதுளை பொலிஸ் பிரிவில் கொட்டகொட பிரதேசத்தில் இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு கொட்டகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபரொருவருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இருவரும் பொல்லால் தாக்கிக் கொண்டனர்.
மறுநாள் காலை குறித்த வீட்டிலுள்ள நபர் வீட்டு வளாகத்தில் இறந்த நிலையில் விழுந்து கிடந்ததை அவதானித்து அவரின் தாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
உயிரிழந்துள்ள நபர் 30 வயதுடைய கொட்டகொட , பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.