வாய்தர்க்கம் கைகலப்பானதில் ஒருவர் மருத்துவமனையில்
முல்லைத்தீவு - முள்ளியவளை, முறிப்பு பகுதியில் இடம்பெற்ற கைக்கலப்பில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (13) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் நபரே படுகாயமடைந்துள்ளார். முறிப்பு பகுதியில் ஒரு குழுவினர் இணைந்து ஒருவருடன் வாய்த்தர்க்கதில் ஈடுபட்டுள்ளனர்.
இரும்பு கம்பியால் தாக்குதல்
பின்னர் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.