யாழ்ப்பாணத்தில் பெரும் துயர சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 4 மாத குழந்தை!
யாழ்ப்பாண பகுதியில் சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதன்போது, மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த 4 மாதங்களே ஆன ரவிநாதன் ஆரப் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த இரு குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன.
இந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (04-03-2024) மாலை ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.