சினிமாவை மிஞ்சிய சம்பவம்; விமான பணிப்பெண் அங்கத்தில் சிக்கிய 1 kg தங்கம் ; அதிகாரிகள் க்ஷாக்!
மஸ்கட்டில் இருந்து கேரளாவிற்கு வந்த விமானத்தில், விமான பணிப்பெண் ஒருவர் தனது ஆசனவாயில் ஒரு கிலோ தங்கத்தை கடத்திக்கொண்டு வந்த சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்த பிறகு, வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
சினிமாவை மிஞ்சிய சம்பவம்
தங்கம் கடத்தலில் விமான நிலைய ஊழியர்கள், ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கூட ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் மஸ்கட்டில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூர் வரக்கூடிய விமானத்தில் பணியாற்றும் பணிப்பெண் தங்கம் கடத்தி வருவதாக கொச்சி விமான புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விமானத்தில் பணியாற்றிய கொல்கத்தாவை சேர்ந்த சுரபி என்ற பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதித்தபோது அவரிடம் எந்த தங்கமும் இருக்கவில்லை.
அதன் பின்னர் பணிப்பெண்ணை முழுமையாக ஸ்கேன் செய்து சோதித்த போது அவரது ஆசனவாயில் தங்கம் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 960 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேவேளை இதற்கு முன்பு நாட்டில் இது போன்று விமான பணிப்பெண் ஆசன வாயில் தங்கத்தை கடத்திக்கொண்டு வந்தது கிடையாது என தெரிவித்த அதிகாரிகள், இதற்கு முன்பு பல முறை சுரபி தங்கம் கடத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளனர்.