முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி
கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிஎல்ல-பானந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பானந்துறையில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளதானதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரொருவரும் காயமடைந்த நிலையில், கிரிஎல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பின் இருக்கையில் பயணித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாடவகல, கிரிஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கிரிஎல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.