கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இன்று (03) மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை உயன்கெலே நிர்மலா மாவத்தையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாத்துவ, தல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரந்திக மதுஷான் (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாணந்துறையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இவர், இன்று மதியம் 12.45 அளவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவர் மற்றுமொரு நபருடன் காலி வீதிக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
පානදුර හෙල්ලූ වෙඩිතැබීම... CCTV සහිතයි pic.twitter.com/0Ur6fiRDfk
— Ada Derana Sinhala (@adaderanasin) June 3, 2022
மற்றைய நபருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கீழே விழுந்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு வந்து காயமடைந்தவர் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
