இலங்கையில் 6 குழந்தைகளின் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ; சுகாதார அமைச்சு தகவல்
நாட்டின் தற்போதைய நிலையில் மந்தபோசணை, அதிபோசணை மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைப்பாடு ஆகிய 3 முக்கிய ஊட்டச்சத்து பிரச்சினைகள் காணப்படுகிறது.
உலகளாவிய தரவுகளின்படி இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 10.1 சதவீதமானோர் வயதுக்கேற்ற வளர்ச்சியும், 16.1 சதவீதமானோர் வயதுக்கேற்ற எடையின்றி காணப்படுகின்றனர்.

மந்தபோசணை
இதனடிப்படையில் நாட்டில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 6 பேரில் ஒருவர் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசேட வைத்தியர் கபில ஜயரத்ன கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 4,500 முதல் 5,000 வரையிலான குழந்தைகள் பல்வேறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்கின்றனர்.
நாட்டில் ஒட்டுமொத்த குழந்தை மரணங்களின் 40 சதவீதமானவை பிறவிக் குறைபாடுகள் முக்கிய காரணமாக அமைகிறது. வருடாந்தம் பிறந்து 1 ஆவது ஆண்டுக்குள் உயிரிழக்கும் சுமார் 2,100 குழந்தைகளில் 700 குழந்தைகளின் மரணங்கள் இப்பிறவிக்குறைபாடுகுளின் காரணமாக நிகழ்கின்றன.
700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பலர் ; உலகை அதிர வைத்த தகவல்
கர்ப்பகாலத்தின் போது சில தீவிரமான பிறவிக்குறைபாடுகளை கண்டறிய முடிந்த போதிலும் நாட்டின் தற்போதைய சட்டத்துக்கு ஏற்ப பிறக்கவிருக்கும் குழந்தையை காப்பாற்ற எவ்வித மருத்துவ நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.
பிறந்தவுடன் இறந்துவிடும் சாத்தியம் நூற்றுக்கு நூறு வீதம் உறுதியாக தெரிந்த நிலையிலும் ஒரு தாயானவர் அக்குழந்தையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். இது தாய், குடும்பம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு என அனைத்துத் தரப்பினரையும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கின்றது.
எனவே, இவ்வாறான தீவிர பிறவிக்குறைபாடுகள் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தாயின் விருப்பத்திற்கு இணங்க கர்ப்பத்தை கலைப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதியை வழங்குமாறு மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தாய், தந்தையுடன் சென்ற 2 வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் ; குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்
இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பாடசாலை செல்லும் மாணவர்களில் 20 சதவீதமானோருக்கு மந்தபோசணை பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது நாட்டில் சுமார் 1.6 மில்லியன் மாணவர்களை இலக்காக கொண்டு பாடசாலை ஊட்டச்சத்து வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனினு, இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவரின் மதிய உணவுக்காக அரசாங்கத்தினால் வெறும் 110 ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது அதிலும் 90 சதவீதமான நிதியே நடைமுறையில் வழங்கப்படுகிறது.
மேலும் கண்டறிக நாளிதழ் சந்தா பத்திரிகை சந்தா விளம்பர சேவைகள் தற்போதைய சந்தை நிலவரப்படி முட்டை ஒன்றின் விலையே 40 ரூபாவாகக் காணப்படும் நிலையில் எஞ்சிய 60 ரூபாவைக் கொண்டு மாணவர்களுக்கு எவ்வாறு சத்தான மதிய உணவை வழங்க முடியும்.
இதன் காரணமாக, சில பாடசாலைகளில் ஒரு முட்டையை பல துண்டுகளாக வெட்டி மாணவர்களுக்குப் பரிமாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்குத் தேவையான முறையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.
"பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றையே வழங்குவோம்" என்ற அரசாங்கத்தின் கொள்கை உண்மையானதாக இருந்தால், இந்தச் சொற்ப நிதியொதுக்கீட்டை உடனடியாக உயர்த்தி, ஊட்டச்சத்து திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்றார்.