தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
இந்தியாவின் தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த செம்மனஅள்ளி கிராமத்தில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 1½ வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அந்த குழந்தையின் தந்தையான கார்த்திக், அவருடைய மனைவி மற்றும் மாமியார் கூலி வேலைக்கு அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் அந்த 3 குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றிருக்கின்றனர்.
செங்கல் சூளை அருகே 2 சிறுமிகளும், தங்கள் தம்பியுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 1½ வயது குழந்தை சிவ ரத்தீஷ் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததுள்ளது.
இதை பார்த்த அங்கிருந்த கார்த்திக், அவருடைய மனைவி மற்றும் மாமியார் அங்கு விரைந்து வந்து குழந்தையை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மாரண்டஅள்ளி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.