யாழில் இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
Jaffna
Accident
Death
Funeral
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US