பேருந்து தீப்பிடித்ததில் ஒருவர் பலி ;அதிகாலையில் நேர்ந்த சோகம்
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடமலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜேதவனராமயவிற்கு அருகிலுள்ள முதியோர் இல்லம் அருகே இன்று அதிகாலை யாத்ரீகர் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சுமார் 55 வயதுடைய ஒருவரே இத் தீ விபத்தில் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் நகர சபை தீயணைப்புத் துறை, அனுராதபுரம் பொலிஸார் மற்றும் உடமலுவ பொலிஸார் இணைந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதும் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.