மாமாவால் பறிபோன குழந்தையின் உயிர்
களுபோவில பகுதியில் கார் மோதியதில் ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
களுபோவில - கொஹூவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரூபன் பீரிஸ் மாவத்தையில் இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.
வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருப்ப முயற்சித்த போது குழந்தை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் காரை செலுத்திய நபரின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என தெரிவித்த பொலிஸார் , காரை செலுத்தியவர் உயிரிழந்த குழந்தையின் மாமா என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.