யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை தொடர்பிலும் அங்கு நடைபெற்ற நிகழ்வு பற்றியும் வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என பல்கலைக்கழகத்தை சுற்றி இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.