நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவக்கூடும்; ஹேமந்த ஹேரத்
புதிய ஒமிக்ரோன் (Omicron) மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்த மாறுபாட்டை காவிச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
நமது நாட்டில் நாம் செய்யும் மரபணு பரிசோதனை மூலம் மட்டுமே இந்த வைரஸைக் கண்டறிய முடியும். மாதிரிகள் மூலம் கண்டறியப்படும் வரை, வைரஸ் நாடு முழுவதும் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டை காவிச் செல்கின்றனரா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, நாட்டுக்குள் நுழைவதற்கான வழிவகைகளைக் குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் சாத்தியமான முடக்கத்தைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் நாட்டை மூடும் திட்டம், சுகாதார அமைச்சிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அந்த நிலையை நாடு அடையாமல் தடுப்பது காப்பது தமது பொறுப்பு எனவும் அவர் மேலும் கூறினார்.