பிரபல நாட்டில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு! வெளியான அதிர்ச்சித்தகவல்
நெதர்லாந்து சென்ற பயணிகளில் 13 பேருக்கு “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஆபதானதாக கருதப்படும் “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் எனும் நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.
அதேவேளை இங்கிலாந்திலும் ஒமிக்ரான் கொரோனா தொற்று இரண்டு பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டுக்கு தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சுமார் 624 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு 61 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை இதையடுத்து டச்சு நாட்டு சுகாதார அமைப்பு அவர்களில் 13 பேருக்கு “ஒமிக்ரான்” வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.