ஓமிக்ரோன் அச்சுறுத்தல்: பிரித்தானியாவில் மீண்டும் ஊரடங்கா?
பிரித்தானியாவில் ஓமிக்ரோன் வேகமாக பரவி வருவதால், மீண்டும் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 93 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் உருமாறிய புதிய வகை கொரோனாவான Omicron அங்கு அதிவேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஓமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அது மட்டும் இன்றி உலகிலேயே முதல் முறையாக அங்கு Omicron தொற்றால் ஒரு உயிரிழப்பும் நேர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் (Johnson) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.