பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண்ணுக்கு நடந்த துயரம்
காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
காலியிலிருந்து பயணித்த தனியார் பஸ் ஒன்று பஸ் தரிப்பிடத்திற்குள் நுழையும் போது பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது படுகாயமடைந்த வயோதிப பெண் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிப பெண் ஆவார்.
இந்த விபத்து தொடர்பில் பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.