யாழில் புதிதாக சேர்ந்த மாணவனுக்கு பழைய மாணவர்களால் நேர்ந்த நிலை!
யாழ். நெல்லியடிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம்-6க்கு புதிதாக சேர்ந்த மாணவன் மீது தரம் - 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காது வழியாக குருதி வந்த நிலையில் மாணவன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (22-02-2024) நடை பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.
தரம்-6 இல் புதுமுக மாணவனாக அந்தப் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
மறுநாளே தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் இணைந்து புதுமுக மாணவனைத் தாக்கியுள்ளனர்.
மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பெற்றோரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.