யாழில் ஆலயம் ஒன்றில் அலறும் ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் அல்லல்!
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் வைரவர் ஆலயத்தில் ஒலிபெருக்கிகளின் ஒலியால் , மாணவர்களும் பொதுமக்களும் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.
காலை 6.15 மணி தொடக்கம் ஒலிபெருக்கியால் மக்களால் சகிக்கமுடியாத மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒலியெழுப்பப்படுவதால் மக்களும், க.பொ. த சாதாரண பரீட்சை எடுதும் மாணவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை
அதேவேளை யாழ். மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பரீட்சை காலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தமுடியாது என கூறப்பட்டுள்ளது.
எனினும் பல இடங்களில் இக்கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பரீட்சை தவிர்ந்த காலங்களிலும் ஆக கூடியது நான்கு ஒலிபெருக்கிகள் மட்டும்தான் பாவிக்க முடியும் என தெரிவிக்கப்படாகிறது.
இந்நிலையில் குறித்த ஆறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலியெழுப்பப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர் இது தொடர்பில் பொலிஸாருக்கும் , பிரதேச செயலருக்கும் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவளை ஒலிபெருக்கிகள் குறித்த கட்டுப்பாடுகளும் அவை தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்களும் அந்தந்த பிரதேச செயலர்களால் செயலகங்களின் உத்தியோகபூர்வ முகநூல்கள் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டடுள்ளன.
ஆனால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தினால் அவ்வாறு எவையும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்டவில்லை. இந்நிலையில் அரச அதிபர் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.