பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையத்தில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சோதனையின் போது விற்பனை நிலையத்தில் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
அத்துடன் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்தததுடன் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்பட்டிருக்கவிலை கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளது.
மேலும் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.