ரஷியாவில் தவித்த இந்திய மாணவர்களுக்கு உதவிகரம் நீட்டிய அதிகாரிகள்
உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விமான நிலைய அதிகாரிகள்.
உக்ரைனில் ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதன்படி மத்திய அரசு, அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனில் வசிக்கும் இந்திய மாணவர்கள் அங்கு இருந்து இன்று ருமேனியாவின் புக்கரெஸ்ட் நகரை அடைந்துள்ளனர்.
புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இந்திய மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விமான நிலைய அதிகாரிகள் வழங்கினர்.
இவர்கள் விரைவில் ருமேனியாவில் இருந்து இந்தியா திரும்புவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.