இலங்கை முழுவதும் பேரிடர் எச்சரிக்கை ; மின், இணைப்பு முடக்கத்திற்கு அதிகாரிகள் விளக்கம்
இலங்கை முழுவதும் தொடர்ச்சியாக உருவாகி வரும் கடும் மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாடு முழுவதும் பேரிடர் சூழல் நிலவுகிறது.
இதனிடையே வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண என நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஊடகவியளாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக முடங்கியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள், மற்றும் அரச சார்பற்ற தன்னார்வ அமைப்புகள் இணைந்து தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் அங்குள்ள உறவுகளை நினைத்து கவளை கொள்ள வேண்டாம் எனவும் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளி இங்கு காணலாம்.....