உத்திக விவகாரம் ; ASP குறித்து புதிய தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை கைது செய்வதற்காக நீதிமன்ற உத்தரவுக்கமை செயற்படவுள்ளதாக என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி, அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாம மற்றும் உத்திக பிரேமரத்ன ஆகியோரினால் திட்டமிட்டு இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகிய நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியை விமான நிலையத்தில் வைத்து வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.