சீன பெண் உடன் ரகசிய உறவை ஒப்புக்கொண்ட என்விடியா CEO! உலகளவில் பேசுபொருளான விவகாரம்
சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹூவாங்குடன் தொடர்பில் இருந்ததை, ஜென்சன் ஹூவாங் ஒப்புக் கொண்டுள்ளார்.
மனைவி, குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு செய்யத் தவறிய கடமைகளுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார்.

குடும்பத்தினரிடம் மன்னிப்பு
இது தொடர்பாக என்விடியா நிறுவனம் விசாரணை நடத்தவுள்ள நிலையில் இந்த விவகாரம் இப்போது பேசுபொருளாகி உள்ளது. அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா நிர்வாக இயக்குநர் ஹூவாங்,63, சீன பெண் தொழிலதிபர் ஆலிஸ் ஹூவாங்குடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
ஆலிஸ் ஹூவாங் சீன உளவு அமைப்பிற்காகச் செயல்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகித்ததாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரம் பூதாகரமானது. அமெரிக்கக் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி சீனாவுக்கு அதிநவீன ஏஐ சிப்களைப் பெற உதவியதாக குற்றம்சாட்டப்படும் சிங்கப்பூரின் 'மெகாஸ்பீட்' தரவு மைய நிறுவனத்துடன் ஆலிஸ் ஹூவாங் தொடர்பில் இருந்தார்.
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கோ, என்விடியாவின் வர்த்தக ரகசியங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், விசாரணை நடத்தப்படும் என்று என்விடியா இயக்குநர்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜென்சன் ஹூவாங் குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ' அவர் ஒரு நேர்மையான மனிதர். நாட்டிற்காக அவர் மிகச்சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்,' என்றும் கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.