தீபாவளி பட்டாசால் விபரீதம் ; கருகிய குடிசைகள் மற்றும் கடைகள்
மும்பை டோங்ரி பகுதியில் உள்ள ஹாஜி கசம் சால் (Haji Kasam Chawl) பகுதியில் நள்ளிரவில் ராக்கெட் பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 40 முதல் 50 குடிசைகள் மற்றும் கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி கோண்டாட்டங்க்கள் இடம்பெற்றது. இதன்போது மக்கள் பெருமளவு பாடாசுகளை கொழுத்தி தீபாவளியை கொண்டாடினர்.

இன்னிலையில் மும்பை டோங்ரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 8) சுமார் 9:58 மணி அளவில், டாக்டர் மகேஸ்வரி சாலையில் உள்ள ஹாஜி காசம் சால் பகுதியில் அமைந்துள்ள ஒரு கேரேஜில் (Garage) தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடுமையான புகை மூட்டமும், தீப்பிழம்புகளும் எழுந்தன .
எனினும் , இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் பல வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாகப் போராடி, திங்கட்கிழமை காலை 10:32 மணிக்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையும் தீயணைப்புத் துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
