நுவரெலியா விபத்து தொடர்பில் ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள பணிப்புரை!
நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் இன்று இரவு (20-01-2023) பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது.
இந்த விபத்தில் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் வேனில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மாணவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் அவர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு விமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி விமானப்படைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்
நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு