வெள்ளவத்தையில் சிக்கிய நூதன திருடர்கள்!
கொழும்பு நகரில் நீண்டகாலமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின் பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 40 மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மோசடியில் வியாபார நிலைய உரிமையாளர்கள்
திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில் வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து வெள்ளவத்தை வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.