வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாதிக்கு நேர்ந்த கதி
ஹட்டனில் இருந்து தனது கடமைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு காரில் பயணித்த செவிலியர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் கெண்தகொல்ல தோட்டம் பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
காருக்கு முன்பாக பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர் திசையில் வந்த லொறியில் மோத முயன்ற நிலையில் காரை தேயிலைத் தோட்டத்தை நோக்கி திருப்பியுள்ளார்.
இதன் போது அவரது கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.