பேரணியில் நாமல் ராஜபக்ச ; ரணிலுக்கு நன்றி தெரிவித்து பாதாதை
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்பு பேரணி ஆரம்பமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் நுகேகொட பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், பேரணியில் கலந்து கொள்வதற்காக வருகைத் தந்துள்ள ஆதரவாளர் ஒருவர் ''ரணிலுக்கு நன்றி'' என்ற பதாதையுடன் கலந்து கொண்டுள்ளார்.

அவரே எமது தலைவர்...
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நாட்டை கட்டியெழுப்பியது ரணில்தான்.
நாட்டில் இருந்த அனைத்து வரிசைகளையும் இல்லாமல் ஆக்கியது ரணில்தான். எனவே அவருக்கு நன்றி செலுத்துவது எமது கடமை. அவரே எமது தலைவர்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது வரையில் பேரணியில் பெருமளவான மக்கள் வருகைத் தந்துள்ளதுடன், பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.