அதிவேக வீதியில் ஓய்வெடுத்த NPPயின் ஆதரவாளர்கள் ; காணொளியால் சர்ச்சை
தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்கு வந்த மக்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிபென்ன சேவை பகுதிக்கு அருகிலுள்ள சாலையில் நின்று மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு ஓய்வெடுப்பதைக் காட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு பொறுப்பான பொலிஸ் கண்காணிப்பாளரின் தலைமையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவாக அதிவேக வீதியில், வீதியோரத்தில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவது குற்றமாகும். அத்துடன் வாகனங்களில் பயணிப்போரும் வீதிகளில் இறங்குவது சட்டவிரோதமாகும்.
இவ்வாறு நிறுத்தப்படும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
வெலிபென்ன சேவைப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் போதுமான இடம் இல்லாததால், சம்பந்தப்பட்ட பேருந்துகள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.