மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு இன்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைய, குறித்த குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.