முன்னாள் அரசியல்வாதிகளுக்கு கால அவகாசம்; கடும் அறிவிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.