உணவு விநியோகம் மற்றும் போக்குவரத்து துறைக்கு முக்கிய அறிவிப்பு ; எரிபொருள் திட்டமிடல் தீவிரம்
மொத்த விற்பனை விநியோகம் மற்றும் போக்குவரத்துத் துறையினரின் எரிபொருள் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான விசேட தரவு சேகரிப்புத் திட்டமொன்றை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ; கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு பெண்கள் ; புதிய சந்தேகங்கள்
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், உணவு விநியோகச் சங்கிலியைப் பாதிக்காமல் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டமிடல்களை மேற்கொள்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் உண்மையான எரிபொருள் தேவையைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கேற்ப விநியோகத்தைத் திட்டமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அரச அமைப்புகளின் கீழ் இதுவரை பதிவு செய்யப்படாத போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மட்டுமே இந்தத் தரவு சேகரிப்பில் உள்வாங்கப்படுவார்கள்.
இந்தத் தரவு சேகரிப்பில் பங்கேற்பது கட்டாயமல்ல. ஆர்வமுள்ள சேவை வழங்குநர்கள் தன்னிச்சையாகத் தமது விபரங்களை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேகரிக்கப்படும் தரவுகள் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, பரிந்துரைகளாக வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், எதிர்கால எரிபொருள் முகாமைத்துவத் தீர்மானங்கள் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி சந்தைக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.